அம்மா உணவகத்தில் மாலை நேர சேவை: மேயர் துவக்கி வைத்தார்!
Mom started the evening service at the restaurant
தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மாலை நேர சேவையை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உடன் இருப்போர் கோரிக்கையினை தொடர்ந்து மாலை நேரத்திலும் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகமானது செயல்படும் என்று கூறியதைத் தொடர்ந்து அந்த சேவையை துவக்கி வைத்தேன் என்றார். மாநகராட்சி உதவி ஆணையர், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் கனகராஜ், கந்தசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
-5pr52.jpg)
இதேபோல தூத்துக்குடியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறையின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஸ்ராம், தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மின்னல் கொடி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Mom started the evening service at the restaurant