தூத்துக்குடி புறப்படும் முதல்வர் ஸ்டாலின்! வெளியான முக்கிய அறிவிப்பு!
mk stalin cm Thothukudi visit
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 4ஆம் தேதி நேரில் சென்று திறந்து வைக்கிறார்.
உலகின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.
2024ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் பின்னர், தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியிலுள்ள 408 ஏக்கர் நிலம் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. தொழிற்சாலை பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mk stalin cm Thothukudi visit