பஹல்காம் தாக்குதல் விவகாரம் ...  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கை, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்த்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:பயங்கரவாத அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டது,தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் நடந்த தினமே "தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF)" என்ற அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதாக அறிக்கை விளக்குகிறது.TRF மறுநாளும் பொறுப்பேற்றதாக அறிவித்தது.

ஆனால் ஏப்ரல் 26-ந்தேதி TRF தங்கள் அறிவிப்பை திரும்பப் பெற்றது; பின்னர் வேறு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு?சில உறுப்புநாடுகள், லஷ்கர்-இ-தொய்பா (LeT)-வின் ஆதரவு இல்லாமல் இத்தகைய தாக்குதல் நடந்திருக்க முடியாது என தெரிவித்தன.

TRF மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் குறிப்பிட்டன.
மற்றொரு நாடு இந்த கருத்துகளை மறுத்து, லஷ்கர்-இ-தொய்பா தற்போது செயல்படவில்லை என தெரிவித்தது.

இந்தியாவுக்கு வலுசேர்க்கும் அறிக்கை:2019-க்குப் பிறகு, ஐ.நா. அறிக்கையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் நேரடியாகக் குறிப்பிடப்படுவது இதுவே முதன்முறை.

அதிகாரிகள், இந்த அறிக்கை இந்தியாவின் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும் என தெரிவித்தனர்.1267 தடைகள் குழுவின் முக்கியத்துவம்:ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தடைகள் குழு பயங்கரவாதிகள் மற்றும் அமைப்புகளுக்கு தடை விதித்து வருகிறது.

இந்த குழுவின் முடிவுகள் அனைத்தும் உயர்மட்ட உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படுவதால், பஹல்காம் தாக்குதல் தொடர்பான இந்த அறிக்கை முக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது.இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு, இந்தியா பாகிஸ்தானின் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Pahalgam attack issue UN Security Council stir report


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->