ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் - அதிரடி காட்டும் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சில கருத்துகளை முன்வைத்தார். 

சபாநாயகர் அப்பாவு அதனை சொல்லி முடித்ததும், கவர்னர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையை புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல், என்ற திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானத்தை முன்மொழியவுள்ளார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் விவாதம் நடைபெறும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin separate resolution passed away against one nation one election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->