டி20 உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு..!
South Africa squad for the T20 World Cup announced
2026 டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த ஏழு பேர் புதிய அணியில் இடம் பிடித்துள்ளனர். மார்க்கிரம் தலைமையிலான அணியில், டி காக், ரபாடா, யான்சன், நோர்ஜே, டேவிட் மில்லர், கேசவ் மகாராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், டெவால்டு பிரேவிஸ், க்வெனா மபாகா, கார்பின் போஸ்ச், டோனி டி ஜோர்சி, ஜேசன் ஸ்மித், டொனோவன் பெரைரா, ஜார்ஜ் லிண்டே ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா அணி:-
மார்க்கிரம் (கேப்டன்) போஸ்ச், டெவால்டு பிரேவிஸ், டி காக், டோனி டி ஜோர்சி, டொனோவன் பெரைரா, மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, மகாராஜ், க்வெனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித்.

English Summary
South Africa squad for the T20 World Cup announced