'பலுசிஸ்தான் பகுதியில் சீனாவின் ராணுவ படைகள்..? ஆபத்தான நிலைமை; உடனடியாக தலையிட வேண்டும்'; இந்தியாவிற்கு பலுச் தலைவர் கடிதம்..!
A Baloch leader has written a letter urging India to intervene due to the possibility of Chinese military forces being stationed in the Balochistan region
பலுசிஸ்தானில் சீனா தமது ராணுவப்படைகளை நிலை நிறுத்தவாய்ப்புகள் உள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்று பலுச் தலைவர் மிர்யார் பலூச், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் அடக்குமுறைகளுக்கு பலுசிஸ்தான் மக்கள் களி வருகின்ற நிலையில், அந்நாட்டு இராணுவத்தினருக்கும் பலூச் படையினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றது. இதில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பகல்காம் தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான் மீது இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை பலுசிஸ்தான் மக்கள் பாராட்டினர். பாகிஸ்தான் பிடியில் இருந்து பலுசிஸ்தான் தனியாக பிரிய வேண்டும் என்றும் பலூச் மக்களை மீட்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இந் நிலையில் பலுச் பிரபல தலைவர் மிர்யார் பலூச், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;
'பலுசிஸ்தான் பல காலங்களாகவே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. அடுத்த சில மாதங்களுக்குள் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சீனா தமது ராணுவ படைகளை நிலை நிறுத்தக்கூடும். இது அப்பகுதிக்கும், இந்தியாவுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
இந்தியாவுக்கும், பலுசிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தேவை. பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கவும், பிராந்திய இறையாண்மையை காக்கவும் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும்.'' என்று அந்த கடிதத்தில்
மிர்யார் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
A Baloch leader has written a letter urging India to intervene due to the possibility of Chinese military forces being stationed in the Balochistan region