திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழாவை அனுமதிக்கவில்லை என்கிறது தமிழ அரசு; ' கந்துாரி' என்ற வார்த்தைக்கு தடையில்லை என்கிறது தர்க்கா தரப்பு..!
The Tamil Nadu government says it did not permit the Kanduri festival at the Thiruparankundram hill
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், 'அனுமதிக்கவில்லை' என, அரசு தரப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் 'திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 21 முதல் ஜனவரி 06 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடு விழாவை தர்கா நிர்வாகம் நடத்துகிறது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதி. கந்துாரி நடத்த அனுமதி அளித்தது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜராகி, 'மலைமீது சந்தனக்கூடு விழா நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடு, கோழி பலியிட, கந்துாரி நடத்த அனுமதிக்கவில்லை. எவ்வித விரும்பத்தகாத சம்பவமும் நடக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குறிப்பிடுகையில், 'ஏற்கனவே இதுபோன்ற நிவாரணம் கோரி தாக்கலான வழக்கில் இந்நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மீண்டும் அதே நிவாரணம் கோரி தற்போது 02-வது முறையாக தாக்கல் செய்த இம்மனு ஏற்புடையதல்ல. மலையில் கந்துாரி விழா நடத்தக்கூடாது. தரைப் பகுதியில் கந்துாரி நடத்தலாம். கந்துாரி என்ற வார்த்தைக்கு தடையில்லை' என்று தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பு சார்பில் ஆஜரான பாஸ்கரன், 'இரு தரப்பினரின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதி, 'ஏற்கனவே பாதிக்கப்பட்டதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், 'பாகிஸ்தான் கொடியை தர்கா நிர்வாகம் ஏற்றுகிறது. இறந்தவர்களின் உடல் மலை உச்சியில் புதைக்கப்படுகிறது' என, தவறான தகவலை அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு எங்களை தான் ஒடுக்குகிறது. 'தர்காவிற்கு சொந்தமான இடத்தில்தான் கொடியேற்றப்படுகிறது' என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
The Tamil Nadu government says it did not permit the Kanduri festival at the Thiruparankundram hill