பெண் காவலர்களுக்கான 9 அட்டகாசமான திட்டங்கள்.! முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பெண் காவலர்களின்  பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அந்த விழாவின் மேடையில் பேசிய ஸ்டாலின் "ஒரு சகாப்தத்தின் பொன் விழாவில் கலைஞர் அவர்களின் மகனான நான் முதலமைச்சராக இதில்  கலந்துக்கொள்வதில் பெருமையடைகிறேன். வீட்டையும் நாட்டையும் காத்து வருகின்ற இந்த பெண் காவலர்களுக்கு நினைத்து பெருமையாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர் ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் என்று தனது நெகிழ்வு பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, அட்டகாசமான 9 திட்டங்களை பெண் காவலர்களுக்காக அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு:-

பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள் பெரு நகரங்களில் அமைக்கப்படும்.

விரைவில் காவல் குழந்தைகள் காப்பகமும் அமைத்து தரப்படும்.

எல்லா காவல் நிலையங்களிலும் காவல் மகளிர்க்கென்று தனி கழிவறைகள் அமைக்கப்படும்.

பணிக்கு வருகை நேரமான 'ரோல் கால்' 7 மணிக்கு பதிலாக 8 மணியாக மாற்றபட்டுள்ளது.

பெண் காவலர்கள் விருப்பப்படி பணியிடை மாற்றமும், விடுப்பும் எடுக்க அமைக்கப்படும்.

டிஜிபி அலவலகத்தில் பணி வழிகாட்டுதல் உதவி குழு அமைக்கப்டும்.

பெண் காவலர்களுக்கு தனியாக துப்பாக்கிச்சுடு போட்டிகள் நடத்தப்படும்.

பெண் காவலர்களுக்கென்று அவரிகளின் திறமையின் அடிப்படையில் கலைஞர் காவல் பணி விருதும் கோப்பையும் வழங்கப்படும்.

இனி வருடாவருடம் பெண் காவலர்கள் மாநாடு நடத்தப்படும்." என்பது போன்ற 9 அட்டகாசமான திட்டங்களை அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mk Stalin introduced 9 schemes for exclusively for female cops on the stage of golden jubilee tamilnadu women police


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->