கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு கூடுதல் இடம் கிடைக்குமா.? 'பேச்சுவார்த்தையில் தெரிய வரும்' என்கிறார் திருமாவளவன்..! - Seithipunal
Seithipunal


புதுவை வில்லியனூர் ஜி.என். பாளையம்பேட் குழந்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் சதிக்கு மோடி பலியாகி விட்டார் என்றும், இந்திய நாட்டின் நலனை விட கார்ப்பரேட் மீது அக்கறை காட்டுகிறார் என்று விமர்சித்துள்ளார். அத்துடன், இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய மக்கள் எதிர்க்கிறார்கள் என்றும், எனவே, மோடி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் ஏற்பீர்களா.? என்பது யூகமான கேள்வி. ஒரு சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், பா.ம.க. ஏற்கனவே எடுத்த சோசியல் என்ஜினியரிங் நிலைப்பாட்டால் வி.சி.க.வின் வெளிப்படையான முடிவை அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த முடிவைதான் மறுபடி மறுபடி சொல்கிறேன் என்றும், இதில் மேற்கொண்டு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு கூடுதல் இடம் கிடைக்குமா.? என்பது பேச்சுவார்த்தையில் தான் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளதோடு, புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavans interview regarding seeking more seats for the VCK in the DMK alliance


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->