காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்; பெங்களூரு ஜிம் பயிற்சியாளரின் விபரீத முடிவு; விசாரணை தொடங்கிய போலீசார்..!
Bengaluru gym trainer commits suicide after his girlfriend gets engaged to someone else
கர்நாடகாவில் காதலிக்கு மற்றுமொரு ஆணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மனா உளைச்சலில் இருந்த ஜிம் பயிற்சியாளர் ஒரு வர தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் 26 வயது ஜிம் பயிற்சியாளர் கிரண் வசித்து வந்துள்ளார். பாடிபில்டரான இவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கரண் காதலித்து வந்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தப் பெண்ணும் தனது திருமணப் பத்திரிகை மற்றும் திருமணப் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார். இதனால் கடந்த இரண்டு வாரங்களாகக் கரண் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அத்துடன் தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கிரண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது;

தனது மரணத்திற்குத் தனது காதலியும் அவரது தாயாருமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனது காதலியின் கடன்களை அடைக்கத் தனது சம்பாத்தியத்தைச் செலவு செய்துள்ளதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கரண் சம்பவத்தினமான நேற்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா கேட்டு வாங்கி அறைக்குள் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளனர்.
கிரண் பல பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றுள்ளார். கிரணின் தற்கொலை குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மகாலட்சுமி லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Bengaluru gym trainer commits suicide after his girlfriend gets engaged to someone else