தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனிடம் கேள்வி கேட்ட ஆசிரியை; என்னை கேள்வி கேட் நீ யார்..? என்று கன்னத்தில் அறைந்த மாணவன்..!
The student slapped the teacher who questioned him for arriving late for the exam
கடந்த ஜனவரி 24 ஆம் தேதி, குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் ஷெஹ்ரா நகரில் உள்ள எஸ்.ஜே. டேவ் உயர்நிலைப் பள்ளியில் மாணவன் ஒருவன் தேர்வுக்கு தாமதமாக வந்துள்ளான். அப்போது கேள்விகேட்ட ஆசிரியருக்கு கன்னத்தில் அறை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது மாணவர் முகமது கான் அன்சாரி இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கு தாமதமாக வந்துள்ளான். அப்போது தேர்வறையில் இருந்த ஆசிரியர் மாணவனிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு குறித்த மாணவன் "என்னை வீட்டிலேயே யாரும் கேட்பதில்லை, நீ யார் கேட்க?" என்று பதிலளித்துள்ளான்.
அத்துடன், அவன் ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தன்று மாணவனின் தந்தை ஆசிரியரிடமும், பள்ளி முதல்வரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதன் தொடர்ச்சியாக ஜனவரி 27 அன்று, தனது தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்த குறித்த மாணவர், தனியாக வசிக்கும் அந்த ஆசிரியையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பிப்ரவரி 03 ஆம் தேதி ஷெஹ்ரா காவல் நிலையத்தில் மாணவர், பள்ளி சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரிந்த நான்கு பேர் மற்றும் 15 முதல் 20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதுவரை மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செயல்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
The student slapped the teacher who questioned him for arriving late for the exam