பல்லடம் நால்வர் கொலை சம்பவம் - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பல்லடம் நால்வர் கொலை சம்பவம் - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் சகோதரர் மோகன்ராஜ். இவர் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக உள்ளார். 

இவரது வீட்டிற்கு நேற்றி முன்தினம் இரவு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் செந்தில்குமார், மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் சகோதரி ரத்தினம்மாள் ஆகியோரை வெட்டியுள்ளது.

இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளி ஒருவரைக் கைது செய்தனர். மேலும், மற்றவர்களையும் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், பல்லடம் நால்வர் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, "உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும், இந்த சம்பவத்தில் ஒருவர் கைதான நிலையில் மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk stalin finacial announce to tirupur palladam murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->