டாஸ்மார்க் நடத்துவதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எள் அளவும் விருப்பமில்லை - பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் நடத்துவதில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எள் அளவும் விருப்பமில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

என்றைக்காவது ஒரு நாள் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் எண்ணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் 

மேலும் அமைச்சர் முத்துசாமி தெரிவிக்கையில், டாஸ்மாக் கடைகளை உடனே மூடினால் என்ன நிலைமை ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும்.

மதுக்கடைகளை மூடும் கடுமையான சூழ்நிலையை நிதானமாக அணுக வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

விசிக திருமாவளவன் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாநாடு நடத்த உள்ள நிலையில், அமைச்சர் இந்த தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்து வரும் நிலையில், இது வரும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Muthusamy say TASMAC CM MKStalin Stand DMK VCK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->