வீட்டில் தொழிலாளியாக வேலை பார்த்த தமிழக அமைச்சர் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வீட்டில் கட்டிடக் தொழிலாளியாக வேலை பார்த்த தமிழக அமைச்சர் - காரணம் என்ன?

தமிழகத்தின் பல்வளத்துறை அமைச்சராக இருப்பவர் மனோ தங்கராஜ். இவர் அரசியல் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சார்ந்த விசயங்களில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பவர். அதுமட்டுமல்லாமல் சுற்றுசூழல் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துபவர். 

இவருடைய தீராத முயற்சியால் குமரி மாவட்டத்தில், “குப்பை இல்லா குமரி” என்னும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடுகளில் சேரும் கழிவுநீரை, வீட்டுக்கு வெளியே விடும்போது நீர் நிலைகளில் கலந்து அவை மாசு ஆவதாகவும், அதனைப் போக்கும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் கழிவு நீர் உறிஞ்சுக் குழாய் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் முன்னோடியாக அமைச்சர் மனோ தங்கராஜ், கருங்கலில் உள்ள தன் வீட்டின் முன்பு தானே கழிவு நீர் உறிஞ்சிக் குழாய் தோண்டினார். 

இந்தக் குழியைத் தோண்டுவதற்கு வேறு யாரையும் பணியில் ஈடுபடுத்தாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சரே இந்தப் பணியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister mano thangaraj work in home vedio viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->