பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.536.09 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு, முதலமைச்சர் உத்தரவின்படி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த டிசம்பர் 2023 முதல் ரூ.536.09 கோடி ஊக்கத்தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 05.11.2022 முதல் ஆவின் பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.32/-லிருந்து ரூ.35/- ஆகவும், எருமைப் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.41/-லிருந்து ரூ.44/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பால் உற்பத்தியாளர்களிடையே கறவை மாடு வளர்ப்பை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும், கடந்த 18.12.2023 முதல் சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3/- வீதம் பால் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, கடந்த டிசம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை தமிழ்நாடு அரசிடமிருந்து ரூ.407.66 கோடி பால் கொள்முதல் ஊக்கத் தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை காரணமாக சுமார் 3.80 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகளவில் அவர்கள் பால் வழங்கி வருகின்றனர். தற்போது ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்திற்கு பால் கொள்முதல் ஊக்கத்தொகையாக ரூ.128.43 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்களின் நலனை பாதுகாத்திட தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து வழங்கி வருவகிறது. இதனால், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி, மென்மேலும் பொருளாதார மேம்பாடு அடைந்திடவும், கிராமப் பொருளாதாரம் உயர்ந்திடவும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Mano Thangaraj informs that Rs 536 crore incentive has been provided to milk producers


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->