#BREAKING || தமிழகத்தில் மேலும் ஊரடனுக்கு நீட்டிப்பு? சற்றுமுன் அமைச்சர் மா.சு., பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதல்வர் முக ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும், அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது,

"தமிழகத்தில் முழு ஊரடங்கு பிடிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதல்வர் முடிவெடுப்பார். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார பாதிப்பு - மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியாக இருந்து வருகிறார்.

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். சென்னையில் போதுமான படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருப்பதால், கொரோனா நோய்த்தொற்று குறித்து மக்கள் கவலை கொள்ள தேவை இல்லை.

பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் திட்டத்தை நாளை தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்கள் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளலாம்.

தற்போது வரை தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 லட்சம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்" என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MINISTER MA SU SAY ABOUT TN LOCKDOWN


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->