பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் தினமும் செய்தியாளர்களை சந்தித்து வளர்ச்சிப்பணிகள், பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தகட்ட செயல்பாடு தொடர்பாக பேட்டியளிப்பார்.

அந்த வகையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, அங்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றியடைந்த நபர்கள் பணி நியமன ஆணை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், " 2018 ஆம் வருடம் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KA Sengottaiyan Pressmeet 19 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal