ஸ்டாலின் மண்டை பனங்கொட்டை போன்றது - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


சென்னை ராமாபுரத்தில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசுகையில், அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், " அமைச்சர் ஜெயக்குமார் ஒரு முந்திரிக்கொட்டை. சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளுக்கு முந்திரிக்கொட்டை போல பதில் கூறுவார். முதலமைச்சர், பிற அமைச்சர்களிடம் பதில் கேட்டால், முந்திரிக்கொட்டை போல பதில் தெரிவிப்பார் " என்று பேசினார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், " முந்திரியில் முந்திரியும் கொட்டையும் உபயோகம் ஆகும். ஆனால், மு.க ஸ்டாலினின் மண்டை பனங்கொட்டை போன்றது. பனங்கொட்டை எதற்காவது உபயோகம் ஆகுமா?.. அவரின் மண்டை பனங்கொட்டை போல உள்ளது " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Jayakumar Pressmeet about MK Stalin Munthirikottai Panangottai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->