அவையில் நையாண்டி செய்யக்கூடாது.. மரபை கடைபிடிக்க வேண்டும் - துரைமுருகன் ஆவேசம்.!!
minister durai murugan speech follow assembly rules
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், பேசுவதற்கு வாய்ப்பு தருமாறு கை தூக்கித் தூக்கி கை வலிக்கிறது என்று அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி தெரிவித்தார்.

உடனே சபாநாயகர் அப்பாவு உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள் என்று பதில் அளித்தார். அதன் பின்னர் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், உறுப்பினர்கள் அனைவரும் அவை மரபை காக்க வேண்டும்; நையாண்டி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
மேலும், சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:- "எம்.எல்.ஏ. ரவி 3 கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு தந்துள்ளேன். யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த ஆட்சி. அதை கடைபிடித்து எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
minister durai murugan speech follow assembly rules