திமுகவின் பொய் பிரச்சாரத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு.! - Seithipunal
Seithipunal


அதிமுக திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டமானது, திட்டக்குடி நகரில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இதன்போது அவர் பேசுகையில், " எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருத்து வேறுபாடு இன்றி செயல்பட வேண்டும். மீண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். தேர்தல் பணிகளை செம்மையாக செய்ய வேண்டும்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அழிந்துவிட்டதாக பலரும் நினைத்த நிலையில், பல போராட்டங்களை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. திமுக மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களுக்கு யார் நல்லவர்கள் என்று தெரியும். திமுகவிற்கு தக்க பாடத்தை மக்கள் தேர்தலில் புகட்டுவார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister CV Shanmugam Speech at ADMK Activists Meeting Tittakudi


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal