திண்டுக்கல்: காலையில் நடந்த கோர விபத்து.! ஒருவர் பலி.!! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்.!!!
திண்டுக்கல்: காலையில் நடந்த கோர விபத்து.! ஒருவர் பலி.!! பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் படுகாயம்.!!!
இன்று காலை திண்டுக்கல் அருகே மினி பேருந்து விபத்துக்குள்ளாகியதில், 30 பேர் படுகாயமடைந்து, ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனுமந்தன் கோட்டை வழியாக திண்டுக்கல் செல்லும் மினி பேருந்து ஒன்று கோட்டம்பட்டி எனும் கிராமத்தின் உள்ள ஒரு குளத்தின் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அனுமந்தராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த மார்க்க ராஜா (வயது 19) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பேருந்தில் உடல் நசுங்கி பலியானார். இந்த மினி பேருந்தில் பயணம் செய்த தொழிலாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
MINI BUS ACCIDENT IN DINDUKAL