அன்பான கணவனை அழிக்கக் கூலிப்படையா...? அந்த ஒரு காரணத்திற்காக மனைவி எடுத்த கொடூர முடிவு...! - விசாரணையில் அம்பலமான ரகசியம் - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே இரட்டை கொலையாக அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணியில், சொத்து தகராறு மற்றும் குடும்ப விரிசல் மறைந்திருந்தது அம்பலமாகியுள்ளது. கணவர் மற்றும் சித்தியை கூலிப்படையினரை ஏவி கொலை செய்ததாக மனைவி உள்பட 8 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டியை சேர்ந்தவர் நஞ்சம்மாள் (45). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது தம்பி மாதேஷ் (40), லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இருவரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து அதியமான்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.விசாரணையில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.மாதேஷுக்கு நாகம்மாள் மற்றும் நஞ்சம்மாள் என 2 அக்காள்கள் இருந்தனர்.

இதில் நாகம்மாளின் மகள் கீதா (33) என்பவரை மாதேஷ் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகளால் கணவன்-மனைவி இடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் கீதா, மாதேஷை பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக சொத்து ரூ.70 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இந்த தொகை குடும்பத்தினருக்குள் 6 பங்குகளாக பிரிக்கப்பட்டது. அதில் தனக்கு கிடைத்த தொகையை மாதேஷ் தனது அக்காள் நஞ்சம்மாளிடம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தனக்குச் சொந்தமான மற்றொரு நிலத்தையும் மாதேஷ் விற்றிருந்தார்.இந்த தகவல் கீதாவுக்கு தெரியவந்ததும், கணவருடன் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. சொத்து பணத்தை சித்தியிடம் ஒப்படைத்ததற்கான ஆத்திரம் நாளடைவில் பழிவாங்கும் எண்ணமாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது கீதாவுக்கு, தனது தோழியின் அண்ணனான பொம்மிடி பகுதியை சேர்ந்த சண்முகம் (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. குடும்பத்தில் நடந்த அனைத்தையும் கீதா அவரிடம் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, கூலிப்படையினருடன் தொடர்பு இருப்பதாக கூறிய சண்முகம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த நபர்களை கீதாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

கணவர் மாதேஷ் மற்றும் சித்தி நஞ்சம்மாளை கொலை செய்ய ரூ.6 லட்சம் தருவதாக கீதா ஒப்பந்தம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, கூலிப்படையினர் கடந்த 2 வாரங்களாக அந்த பகுதியை கண்காணித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, வீட்டில் இருந்த மாதேஷ் மற்றும் நஞ்சம்மாள் ஆகிய இருவரையும் சரியான நேரம் பார்த்து கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

மேலும், இந்த கொலை திட்டத்திற்காக கீதா தனது உறவினரான பொன்னியம்மாள் (61) மூலம் பணத்தை வழங்கியதும், அந்த தொகை வங்கி கணக்குகள் வழியாக கூலிப்படையினருக்கு சென்றதும் காவலர்கள் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, கீதா, பொன்னியம்மாள், சண்முகம் மற்றும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ஹரி ராமச்சந்திரன் (36), ஆறுமுகம் (40), ரங்கநாதன் (33), சந்துரு (26), கோபிநாத் (40) ஆகிய 8 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.சொத்து தகராறு எவ்வளவு கொடூரமான முடிவுக்கு தள்ளும் என்பதற்கு இந்த சம்பவம் அதிர்ச்சி உதாரணமாக மாறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mercenary destroy his beloved husband wife cruel decision made that one reason Secret revealed investigation


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->