எ.வ. வேலுவிற்கு பிறகு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்க போகும் முக்கிய 05 திமுக நிர்வாகிகள்..? - Seithipunal
Seithipunal


திமுகவின் எ.வ.வேலுவை தொடர்ந்து, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, சேகர் பாபு, மூர்த்தி, அன்பில் மகேஸ் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை குறிவைத்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

எ.வ.வேலு

வடக்கு மண்டல திமுக பொறுப்பாளரான எ.வ.வேலு, கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை என இருபெரும் துறைகளை நிர்வகித்தார். தொடர்ந்து  07வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது திமுக சட்டமன்ற கொறடாவாகவும் உள்ளார்.

செந்தில் பாலாஜி

அடுத்ததாக, செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர் என்றாலும் திமுக தலைமைக்கு நெருக்கமானவர். இவர் 03 முறை அமைச்சர், 05வது முறை எம்.எல்.ஏவாகவும் இருக்கிறார். ஏற்கெனவே, அமலாக்கத் துறை விசாரணையையும், கரூர் சம்பவத்துக்காக சிபிஐ விசாரணையையும் சந்தித்தவர் இந்த சந்தில் பாலாஜி.

கே.என் நேரு

அடுத்து, திருச்சியின் அடையாளமாக கருதப்படுபவரும், திமுக முதன்மை செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு. 03 முறை அமைச்சராக இருந்ததுடன், 06-வது முறையாக எம்எல்ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். திமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவர்களில் அன்பில் மகேஸ், உதயநிதிக்கும் மிகவும் நெருக்கமானவர்.

அன்பில் மகேஸ்

திமுகவின் இளைஞர் அணி துணை அமைப்பாளராக 2015-இல் களம் இறங்கியவர் அன்பில் மகேஸ். இவர் 02 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலராக பொறுப்பு வகிக்கிறார். ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர்.

மூர்த்தி

அடுத்ததாக, மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரான மூர்த்தி. கடந்த ஆட்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் அதாவது திமுகவின் அசையும் சொத்துக்களில் மிக முக்கியமான ஒருவர்.

சேகர் பாபு

இவர்களுடன் மிக முக்கியமாக பலராலும் பல வழிகளில் அறியப்பட்டவர்தான் திமுக முதன்மை குடும்பத்துக்கு நெருக்கமானவரான சேகர் பாபு. இவர், அறநிலையத் துறையுடன், சிஎம்டிஏ பொறுப்பையும் வகித்தவர். வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலர். 05வது முறை எம்.எல்.ஏவாக தொடர்கிறார். அறநிலையத் துறையுடன், சிஎம்டிஏ பொறுப்பையும் வகித்தவர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Key DMK executives to be caught by the Anti Corruption Bureau after EV Velu departure


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->