'ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ; 18,000 அடி உயரத்தில் இருந்து பேரனுடன் ஸ்கை டைவிங் செய்த 80 வயது முதியவர்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடை​பெற்ற ஸ்கை டைவிங்கில், இந்​தி​யா​வைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் தனது பேரனுடன் 18,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்​தி​யா​வின் ஹரி​யானா மாநிலத்​தைச் சேர்ந்​தவர் அங்​கித். ஆஸ்​திரேலி​யா​வில் வசிக்​கும் இவருக்கு ஸ்கை டைவிங்​கில் அதிக ஆர்​வம் உள்ளது. இந்நிலையில், அங்​கித் தனது தாத்​தாவுடன் ஏற்​கெனவே 15,000 அடி உயரத்​தில் இருந்து குதித்​துள்​ள நிலையில், தற்போது இரு​வரும் சேர்ந்து 18,000 அடி உயரத்​தில் இருந்து குதிக்க முடிவு செய்​தனர்.

இதனையடுத்து, விமானத்​தில் ஏறும்​ முன் அங்​கித் தனது 80 வயது தாத்​தா​விடம், 'பயப்பட வேண்​டாம்' என கூறி​யுள்​ளார். அதற்கு தாத்தா 'யார் பயந்​தது' என கூறி விமானத்​தில் இருந்து பேரன் அங்​கித்​துடன் பாராசூட் மூலம் பறந்து வந்து குதித்து வெற்​றிகர​மாக தரை​யிறங்​கியுள்ளார்.

அப்போது இந்​திய தேசிய கொடி​யுடன் தரை​யிறங்​கிய தாத்தா 'ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்! ஜெய் ஹரி​யா​னா!' என தேசபக்​தி​யுடன் உற்​சாக​மாக குரல் கொடுத்​துள்ளார். இந்த வீடியோவை அங்​கித் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்​துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

80 year old man skydives with his grandson from 18000 feet


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->