தண்டவாள பராமரிப்பு; திருவள்ளூர் - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


அரக்கோணத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் வழியாக சென்ட்ரல் வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றது. புறநகர், விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் அவதியடைத்துள்ளனர்.

கோவை, பெங்களூரு மற்றும் திருப்பதி மார்க்கத்தில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை வரும் முக்கிய விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, 1.5 மணி நேரம் முதல் 02 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. அத்துடன், புறநகர் மின்சார ரயில்கள் அரைமணி நேரம் தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

கடந்த ஜூன் 27, 28 ஆம் தேதிகளில் அரக்கோணம் யார்டு மேம்பாட்டுப் பணிகளுக்காக 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும், இன்று ரயில்கள் ரத்து செய்யப்படாவிட்டாலும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) ரயில்கள் தாமதமாவதால், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் வழக்கமாகப் பயணிக்கும் அலுவலகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்றோடு (ஞாயிறு) பெரும்பாலான முக்கிய ரத்துகள் முடிவடைந்துள்ள நிலையில், தண்டவாள இணைப்பு மற்றும் சிக்னல் சோதனைகள் (Signal testing) இன்றும் தொடர்கிறது. இதனால், ரயில் போக்குவரத்துக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train service affected on the Tiruvallur to Arakkonam route


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->