எம்பி-க்களுக்கு அசைவ உணவு சாப்பிட உரிமை; பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் சைவமா..? திரிணாமுல் எம்பி கேள்வி..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 15 ஆண்டுகள் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை படுதோல்வியடைய வைத்து பாஜக முதல் முறையாக அபார வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

முதல்வரான சுவேந்து அதிகாரி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க மாநில பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தில் மீண்டும் முட்டைகளை சேர்க்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டோலா சென், மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.

அம்மாநில பள்ளிகளில் மதிய உணவு வழங்க இஸ்கான் அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால், அங்குள்ள பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த முட்டைகள் நீக்கப்பட்டு, சமீப வாரங்களாக சைவ உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இஸ்கான் அமைப்பு கடுமையான சைவ உணவு முறையைப் பின்பற்றுவதால், முட்டைக்கு பதிலாக பன்னீர் மற்றும் சோயாபீன்ஸ் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புதிய நடைமுறைக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டோலா சென் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாடாளுமன்ற கேன்டீனில் எம்பி-க்களுக்கு அசைவ உணவு சாப்பிட உரிமை இருக்கும் போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் அந்த உரிமை ஏன் மறுக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

குறிப்பாக மேற்கு வங்க கலாச்சாரத்தில் மீன் மற்றும் முட்டை முக்கிய உணவாக இருக்கும் நிலையில், முட்டை கொடுப்பதை தடுப்பது மேற்குவங்க குழந்தைகளின் அடிப்படை உணவு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trinamool MP questions about vegetarian meals being served to school children in West Bengal


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->