நெயில் ஆர்ட் (Nail Art) செய்தால் மாதம் 10 லட்சமா...? - துபாயை கலக்கும் 32 வயது இளம்பெண்ணின் மெகா சக்சஸ் ஸ்டோரி...! - Seithipunal
Seithipunal


சிறிய தொழில் என்று எதையும் குறைத்து மதிப்பிட முடியாது; ஆர்வம், உழைப்பு, திறமை ஆகிய மூன்றும் சேர்ந்தால் சாதாரண தொழிலும் அசாதாரண வெற்றியை உருவாக்கும் என்பதை பலர் நிரூபித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஊக்கமூட்டும் வெற்றிக் கதையாக, நக அலங்காரத் தொழிலின் மூலம் மாதம் ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டும் இளம்பெண்ணின் சாதனை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வியட்நாமை சேர்ந்த 32 வயதான நுயென் புவாங் ஆன் என்ற இளம்பெண், தனது திறமையும் விடாமுயற்சியும் மூலம் தொழில்முனைவோருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு குடிபெயர்ந்த அவர், நக அலங்கார நிபுணராக தனது பயணத்தை தொடங்கினார்.

‘புல்லா’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடையே தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய அவர், இந்தத் துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர்.அவரது நேர்த்தியான வேலைப்பாடும், புதுமையான வடிவமைப்புகளும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவரது சேவைக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தரமான சேவையுடன் குறைந்த கட்டணமும் வழங்கப்பட்டதால், நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.இந்த வரவேற்பை தொடர்ந்து, துபாயின் ஜுமேரா வில்லேஜ் சர்க்கிள் பகுதியில் அவர் சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை தொடங்கினார்.

அந்த முயற்சி அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.தொழிலில் கிடைத்த வருமானத்தை செலவழிக்காமல் மீண்டும் அதே துறையில் முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்திய அவர், இன்று மாதம் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “எனக்கு 50 வயதாகும் போது நிதி சுதந்திரத்துடன் ஓய்வு பெற வேண்டும் என்பதே இலக்கு. அதற்காக தொடர்ந்து முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.

துபாயில் மட்டுமல்லாமல் அபுதாபி, புஜைரா உள்ளிட்ட பிற அமீரகங்களிலும் கிளைகள் தொடங்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் குறைந்தது 5 கிளைகள் வரை உருவாக்குவதே என் கனவு” என்று தெரிவித்துள்ளார்.சிறிய அளவில் தொடங்கிய முயற்சி இன்று பெரும் வெற்றியாக மாறியுள்ள இந்த சாதனை, திறமைக்கும் தொடர்ந்து உழைப்பிற்கும் கிடைக்கும் வெற்றியின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 lakhs month if you do nail art mega success story 32 year old woman who shaking up Dubai


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->