நள்ளிரவு 11 மணிக்கு நேர்ந்த கொடூரம்...! ஜே.இ.இ தேர்வு அழுத்தத்தால் மேம்பாலத்திலிருந்து குதித்த 18 வயது மாணவி...!
horror that happened 11 am 18 year old student jumped from flyover due pressure JEE exam
ராஜஸ்தானின் கோட்டா நகரம் மீண்டும் ஒரு மாணவர் உயிரிழப்பு சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளது. போட்டித் தேர்வுகளின் கடுமையான அழுத்தத்துக்கிடையில், ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அளவில் ஜே.இ.இ. மற்றும் நீட் போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகராகவே கோட்டா கருதப்படுகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தங்களது எதிர்கால கனவுகளுக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.ஆனால், வெற்றிக்கான கடுமையான போட்டி, மன அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளின் சுமை காரணமாக மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதான ஜெயஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐ.ஐ.டி.யில் சேரும் கனவுடன் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வந்த ஜெயஸ்ரீ, கடந்த ஜனவரி மாதம் முதல் கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்று வந்தார்.
அதேசமயம், அங்குள்ள விடுதியில் தங்கி தேர்வுக்கான தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழலில், இரவு சுமார் 11 மணி அளவில் ஜெயஸ்ரீ, கோட்டா–ஜாலவார் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் சக மாணவர்களையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, நடப்பாண்டில் மட்டும் கோட்டா நகரில் பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய மாணவர் தற்கொலை சம்பவங்களில் இது 7-வது உயிரிழப்பாக பதிவாகியுள்ளது. இந்த தொடர் சம்பவங்கள், போட்டித் தேர்வு கலாச்சாரத்தின் பின்னால் இருக்கும் மன அழுத்தம் குறித்து மீண்டும் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
horror that happened 11 am 18 year old student jumped from flyover due pressure JEE exam