ஆத்திரத்தில் டிரைவர் செய்த வெறிச்செயல்...! மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு...அலறும் குழந்தைகள்...!
driver crazy act anger bizarre decision made middle night after suspecting his wife behavior Screaming children
கர்நாடகாவில் குடும்பத் தகராறு கொடூர கொலையாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகாவைச் சேர்ந்த கடகேரி கிராமத்தில் வசித்து வந்தவர் பர்குண்டா (39). டிரைவராக பணியாற்றி வரும் இவர், தனது மனைவி ஷோபா (35) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஷோபா அருகிலுள்ள பள்ளியில் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த தம்பதியினர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் சுமுகமாக சென்ற குடும்ப வாழ்க்கையில், பர்குண்டாவின் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி பிரச்சினைகள் உருவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.பர்குண்டா தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
சம்பவம் நடந்த நாளிலும் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் ஷோபாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்ததால், பர்குண்டா தனது மனைவியை சரமாரியாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர்.
ஆனால் நள்ளிரவில் மீண்டும் எழுந்த பர்குண்டா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த ஷோபாவை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த ஷோபா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி உயிரிழந்ததை கண்டு அதிர்ந்த பர்குண்டா, உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர், ஷோபா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து உடனடியாக அதானி காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், ஷோபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தலைமறைவாக இருந்த பர்குண்டாவை விரைவில் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கொடூர குடும்பக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
driver crazy act anger bizarre decision made middle night after suspecting his wife behavior Screaming children