அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைத்த மாற்றுக் கட்சியினர்!
Members of the opposition party joined the DMK in the presence of the minister
சேலத்தில் அதிமுக, பாமக, உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 270 நபர்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்..
தமிழக முதல்வர் மக்களுக்கான நல்லாட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் விழாவில் பேசினார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் மாளிகையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. குறிப்பாக சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுக, பாஜக,அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 270 பேர் விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்தவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சால்வை அணிவித்து கட்சியில் வரவேற்பு அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியது,தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். ஏழை எளிய மக்கள்,விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், மகளிர் என அனைத்து தரப்பினருக்குமான நல்லாட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். இதனால் மக்களும் உணர்ந்துள்ளனர். தற்போது கட்சியில் இணைந்த அனைவருக்கும் திமுகவினர் அனைத்து தரப்பினரும் துணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். திமுகவில் இணைத்துக் கொண்ட அனைவரையும் அரவணைத்து அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று வரவேற்பதாக கூறினார்.
English Summary
Members of the opposition party joined the DMK in the presence of the minister