மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை: கிடைத்த உருக்கமான கடிதம்! சிக்கிய 3 பேராசிரியர்கள்!
medical student suicide case police investigation
கன்னியாகுமரி, ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
தூத்துக்குடி வி.டி.சி நகரைச் சேர்ந்த சிவகுமார் மகள் சுஜிர்தா (வயது 27) என்பவர் மாணவிகளின் விடுதியில் தங்கி முதுநிலை எம்.டி பயிற்சி மருத்துவராக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று காலை கல்லூரிக்கு வராததால் சக மாணவிகள் சந்தேகமடைந்து விடுதி அறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சுஜிர்தா மயக்கமடைந்த நிலையில் கிடந்தார்.

இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து கல்வி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவியின் பெற்றோர் தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தங்கி இருந்த விடுதி அறையில் ஆய்வு நடத்தினர். அப்போது மாணவி சுஜிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில் ஆங்கிலத்தில், ஒரு பெண் பேராசிரியை உள்பட 3 பேராசிரியர்கள் தன்னை கொடுமை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரு பேராசிரியர் மனதளவிலும் உடலளவிலும் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே போலீசார் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
medical student suicide case police investigation