மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு - அமைச்சர் தகவல்! 
                                    
                                    
                                   Medical consultation date announcement  Ministers information
 
                                 
                               
                                
                                      
                                            ஜூலை 30-ந்தேதி மருத்துவ கலந்தாய்வு தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் MBBS மற்றும் BDS பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:MBBS & BDS இளங்கலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 5 முதல் 29 வரை பெறப்பட்டது.
மொத்தம் 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.சில மாணவர்கள் சான்றிதழ்கள் இணைக்க மறந்த நிலையில், அவர்களுக்கு 2 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி நாள் – ஜூலை 18, காலை 10 மணி என்று தெரிவித்தார்.
மேலும் 20 விண்ணப்பதாரர்கள் போலி சான்றிதழ்கள் வழங்கியமை கண்டறியப்பட்டுள்ளது.7 பேர் – பிறப்பிடம் சான்றிதழ் போலி,9 பேர் – சாதி சான்றிதழ் போலி,4 பேர் – NRI தூதரக சான்றிதழ் போலி,இவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், 3 வருடங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலுமாக, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும் இறுதி தகுதி பட்டியல் – ஜூலை 25, காலை 10 மணிக்கு வெளியீடு,அதே நாளில் மெரிட் ரிசல்ட் (Merit Result) வெளியிடப்படும்,கலந்தாய்வு மத்திய அரசு கால அட்டவணைப்படி நடைபெறும்,மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை சரிபார்த்துவிட்டு கால அவகாசத்தில் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என அமைச்சர்  மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Medical consultation date announcement  Ministers information