மயிலாடுதுறையில் அதிர்ச்சி...! வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து மூதாட்டியிடம் 7.5 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை...! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை நள்ளிரவில் மிரட்டி, கழுத்தை நெறித்து தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பாடகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், நள்ளிரவில் அவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர், அங்கு உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை திடீரென மிரட்டியுள்ளார்.பின்னர் அவரை தாக்கி கழுத்தை நெறித்த அந்த நபர், மூதாட்டி அணிந்திருந்த 7½ சவரன் தங்க நகைகளை பறித்துள்ளார்.

மேலும், வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.மேலும், வீட்டின் ஓட்டை பிரித்து மர்ம நபர் உள்ளே நுழைந்தது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தில் ஈடுபட்ட நபரை விரைந்து பிடிக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா உத்தரவிட்டார்.இதையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை காவலர்கள் சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mayiladuthurai They broke house and robbed old woman 7point5 sovereigns jewelry and 50 thousand


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->