மிஸ்சியை ஆன் செய்தபோது விபரீதம்: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரியும் தீ; மீட்கும் பணிகள் தீவிரம்..!
Massive fire breaks out in apartment building in Raja Annamalaipuram Chennai
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 05-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில், மிக்சியை ஆன் செய்து பயன்படுத்திய போது குறித்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மிக்சியில் ஏற்பட்ட தீ விபத்து வீடு முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. 05-வது தளத்தில் ஏற்பட்டதீயானது 06-வது தளம் என அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருவதால் குடியிப்பு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர், தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், 05-வது மற்றும் 6வது மாடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை திரிதப்படுத்தியுள்ளனர்.
புகை மூட்டத்தால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ள அனைத்து வாகனங்களையும் எடுக்குமாறு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
English Summary
Massive fire breaks out in apartment building in Raja Annamalaipuram Chennai