சென்னையில் வேலையை காட்ட தொடங்கிய மாண்டஸ் புயல்! டிவிட்டரில் ட்ரெண்ட்! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. சென்னையை புயல் நெருங்கி வரும் நிலையில், மெரினா கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில்  ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. 

ஆரம்பத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த இந்த புயல், தற்போது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளது. இதன் காரணமாக புயல் கரையை கடக்கும் நேரத்தில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது  ‘மாண்டஸ்’ புயல் காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

கரையை நோக்கி புயல் நக்கட்ர்ந்து வருவதால், தற்போது சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது. லேசான மழைக்கே chennai Rains என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

கடலூர், புதுச்சேரி பகுதியிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவல்படி, மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை நள்ளிரவில் கரையை கடக்கும். இதன்காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில்  மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.

மேலும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mandous Cyclone near chennai 580km


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->