தூத்துக்குடியில் அதிர்ச்சி...! குடும்பத் தகராறுக்குப் பின் வீட்டுக்குள் கதவை பூட்டிக்கொண்ட நபர் சடலமாக மீட்பு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட 54 வயது நபர், சிறிது நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த சுப்பையாவின் மகன் ஜெயசங்கர் (54). இவரது மனைவி ஜெயலட்சுமி.

இந்த தம்பதிக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.இந்த நிலையில், நேற்று மாலை ஜெயசங்கர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது குடும்பப் பிரச்சினை தொடர்பாக அவருக்கும் மனைவி ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறுக்குப் பிறகு ஜெயசங்கர் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டார். அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றதால், ஜெயலட்சுமியும் அவரது பிள்ளைகளும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் இரவு சுமார் 8 மணியளவில் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு தொடர்ந்து பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் ஜெயசங்கர் கதவை திறக்காததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஜெயசங்கரின் மூத்த மகன் ஜெயபாரத் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது வீட்டுக்குள் பாயில் ஜெயசங்கர் எந்தவித அசைவும் இன்றி கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக அவரை பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் ஜெஸ்லின் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் ஜெயசங்கரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஜெயசங்கரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man who locked himself inside his house after family dispute found dead


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->