தூத்துக்குடியில் விபரீதம்...! சாலையில் தேங்கிய தண்ணீரால் நிலைதடுமாறி விழுந்த பைக்...! - மேற்பார்வையாளர் பரிதாப சாவு
Tragedy Thoothukudi bike fell due stagnant water road Supervisor dies tragically
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில், பைக்கில் சென்ற தனியார் கார் நிறுவன மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சென்ற பகுதியில் பைக் எதிர்பாராதவிதமாக வழுக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏரல் அருகே சிவகளை பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் மகன் சொரிமுத்து (30). இவர் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் பேட்டரி கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் சொரிமுத்து பைக்கில் திருச்செந்தூருக்கு சென்றுவிட்டு, பின்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் புதுநகர் பகுதியில் சாலையின் வளைவில் சொரிமுத்து பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் சென்றுகொண்டிருந்தது.அந்த இடத்தை கடந்து செல்ல முயன்றபோது, தண்ணீரால் சாலை வழுக்கிய நிலையில், எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது.
இதில் சொரிமுத்துவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தின் தாக்கத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் அறிந்த குரும்பூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சொரிமுத்துவின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சென்றதால் ஏற்பட்ட வழுக்கலே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Tragedy Thoothukudi bike fell due stagnant water road Supervisor dies tragically