தாய் வீட்டிற்கு சென்ற மனைவி - நொடியில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!!
man sucide for wife going to mother house in thiruvarur
திருவாரூர் மாவட்டம் கூடூர் அருகே நாரணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன்-சவுந்தர்யா தம்பதியினர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இந்தத் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த சவுந்தர்யா கணவனிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த மணிகண்டன், களைக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி தாய் வீட்டிற்குச் சென்றதால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man sucide for wife going to mother house in thiruvarur