அடுத்தடுத்து உயிரை பறிக்கும் ஆன்லைன் ரம்மி - திருச்சியில் சோகம்.!!
man sucide for loss money in online rummy
திருச்சி மாவட்டம் வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். திருமணமான இவர் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே குமாருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் விளையாட்டிற்கு அடிமையான இவர் அதில், பல லட்சத்தை இழந்துள்ளார். இதனால் நெருக்கடிக்கு ஆளான கிஷோர் குமார் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இதைப்பார்த்த அவரது உறவினர்கள் உயிருக்கு போராடிய குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிஷோர் குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கிஷோர் குமாரின் மனைவி ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
man sucide for loss money in online rummy