நெல்லை : பன்றிப்பண்ணையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளர் - போலீசார் விசாரணை.!!
man died pig pannai in tirunelveli
நெல்லை : பன்றிப்பண்ணையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளர் - போலீசார் விசாரணை.!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடத்தில் ஹரிராம் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் அரியநாயகிபுரம் அணைக்கட்டுக்கு அருகே ஒதுக்குப்புறத்தில் சொந்தமாக பன்றிப் பண்ணை ஒன்று வைத்துள்ளார். இங்கு பெரும்பாலும் செல்லத்துரை மட்டும் தனியாக இருப்பது வழக்கம்.
இந்த நிலையில், செல்லத்துரை பண்ணையில் உயிரிழந்த நிலையில் கட்டிலிலேயே கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று செல்லத்துரை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், செல்லத்துரையின் உறவினரான பாலகிருஷ்ணன் என்பவர் பண்ணைக்கு அடிக்கடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலகிருஷ்ணனைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பாலகிருஷ்ணன் செல்லத்துரையின் பணத்தை அபகரிக்கும் நோக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார், நேற்று பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
English Summary
man died pig pannai in tirunelveli