கை விரலை வெட்டி மத்திய அமைச்சருக்கு பார்சல் - மகாராஷ்டிராவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கை விரலை வெட்டி மத்திய அமைச்சருக்கு பார்சல் - மகாராஷ்டிராவில் பரபரப்பு.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் முகாம் எண்.4ல் உள்ள அஷாலேபாடா பகுதியில் நந்தகுமார் நானாவரே என்பவர், குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நந்தகுமார் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னதாக முன் தனது மொபைல் போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், சதாரா மாவட்டம் பால்தான் தாலுகாவைச் சேர்ந்த சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர், நிதின் தேஷ்முக், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக் உள்ளிட்டோரால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் ஆத்திரமடைந்த நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய், தனது ஒரு விரலை வெட்டி அதனை வீடியோவாக பதிவு செய்து மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில், மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு பரிசாக அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதால் விசாரணை மந்தமாக நடப்பதாகவும், தனது அண்ணன் மரணத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு வாரமும் தனது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டி அனுப்பி வைப்பதாகவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man cut finger and parcel to central minister in maharastra


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->