ஸ்வீட் வாங்கிவிட்டு கடை ஊழியரை மிரட்டிய டூப்ளிகெட் போலீஸ்.! கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் வளசரவாக்கம் பகுதியில் தங்கி பிரபல ஸ்வீட் கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு கடையில் இருந்த போது கையில் வாக்கி டாக்கியுடன் வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் ஸ்வீட் கடையில் சிப்ஸ் பாக்கெட், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் புறப்பட்டு சென்றுள்ளார்.

உடனே அருண்குமார் அந்த நபரை தடுத்து நிறுத்தி வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், அந்த ஆசாமி நான் யார் தெரியுமா? லோக்கல் போலீஸ் எனக்கூறி மிரட்டல் விடுத்ததுடன் கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது, அந்த வழியாக வந்த ரோந்து காவலர்களிடம் அருண்குமார் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் அந்த டிப்டாப் ஆசாமியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் போரூர் காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பதும், இவர் தனியார் நிறுவனத்தின் அக்கவுன்டராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. 

இதையடுத்து, போலீஸார் ரமேஷிடம் இருந்து வாக்கி டாக்கி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for threat to sweet shop employee in sivakangai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->