காஞ்சிபுரம் : ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - குற்றவாளி அளித்த பகீர் வாக்குமூலம்.!
man arrested for robbery attempt ATM in kanchipuram
காஞ்சிபுரம் : ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - குற்றவாளி அளித்த பகீர் வாக்குமூலம்.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஜார் வீதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் இரண்டு நாள்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடைபெற்றது.

ஆனால், ஏடிஎம் மையத்தை உடைக்க முடியாததால் மர்மநபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது காஞ்சிபுரம் மாவட்டம், முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது அவர், “நான் மதுபோதையில் இருந்தபோது பணத்திற்கு ஆசைப்பட்டு ஏடிஎம்மை உடைத்தேன். ஆனால் அதை உடைப்பதற்குள் ஆட்கள் வந்துவிட்டார்கள். அதனால் ஏடிஎம் மையத்தை விட்டு ஓடிவிட்டேன் ”என்றுத் தெரிவித்தார்.
ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு ஏடிஎம்மில் ஏழு லட்சம் ரூபாய் பணம் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
man arrested for robbery attempt ATM in kanchipuram