ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு - காதலிச் சென்ற பேருந்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி அருகே நரசிங்க பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமைராஜ் மகன் பிரேம்குமார். டிப்ளமோ மெக்கானிக் படித்துள்ள இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண், பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் அந்த பெண் ஊருக்கு செல்வதற்காக நரசிங்கபாளையம் காலனி பபேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். பின்னர் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் அந்த பெண் ஏறிச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பிரேம்குமார் தனது காதலி சென்ற அரசு பேருந்தை நிறுத்த பெட்ரோல் குண்டு வீசினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் திடீரென பேருந்தை நிறுத்தியதால், அந்த பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து தீப்பிடித்தது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் பீதியில் அங்கிருந்து வெளியே தப்பித்து ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for petrol bomb attack to govt bus in ariyalur jeyankondam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->