திருப்பூர் || வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் படி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு உத்தரவு பேரில் காவல்துறையினர் மருந்து கடைகளில் ஆய்வு நடத்தி, மருத்துவர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என்று உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் வீரபாண்டி பகுதியில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சற்குணப்பாண்டியன் என்பவர் ஆன்லைன் மூலம் மொத்தமாக வலி நிவாரண மாத்திரைகளை வாங்குவது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சற்குண பாண்டியனை கவனிக்க ஆரம்பித்தனர்.

அப்போது, சற்குணபாண்டியன் வீரபாண்டி அருகே கொரியரில் வந்த 200 வலி நிவாரண மாத்திரைகளை பெற்ற போது வடக்கு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்த 200 வலி நிவாரண மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரைகளை ஆர்டர் செய்து தொழிலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு விற்பனை செய்ததும், ஒரு மாத்திரையை ரூ. 35க்கு வாங்கி அதனை 10 மடங்கு அதிகமாக ரூ.350 வரை விற்பனை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for pain killer tablet sales in tirupur


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->