தென்காசி || மனைவியுடன் தகராறு - கள்ளக்காதலன் தலையை துண்டித்த இளநீர் வியாபாரி.!
man arrested for murder in tenkasi
தென்காசி || மனைவியுடன் தகராறு - கள்ளக்காதலன் தலையை துண்டித்த இளநீர் வியாபாரி.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை அருகே கண்ணாடி குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். விவசாயம் செய்து வந்த இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டிவிட்டு வேல்முருகனின் தலையைத் துண்டித்து கோணிப்பையில் போட்டு
கட்டி தனது மொபட்டில் எடுத்துச் சென்றார். இதனால், வேல்முருகனின் உடல் பகுதி மட்டும் துடி துடித்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை அந்த வழியாக வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெறும் உடலை மட்டும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
அந்த நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ராஜா புதுக்குடி கிராமத்தில் இசக்கி அம்மாள் என்பவரது வீட்டில் வேல்முருகன் தலை மட்டும் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல் முருகனின் தலையை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், "கண்ணாடி குளத்தைச் சேர்ந்த வேல்சாமி என்பவரின் மனைவி இசக்கி அம்மாளுக்கும் விவசாயி வேல்முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், இதை அறிந்த வேல்சாமி தனது மனைவியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வேலுசாமி வேல்முருகனைத் திட்டமிட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வேல் சாமியை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.
English Summary
man arrested for murder in tenkasi