நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொன்று தோட்டத்தில் வீசிய கணவர் கைது.!
man arrested for kill wife in tenkasi sangaranpandal
நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொன்று தோட்டத்தில் வீசிய கணவர் கைது.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் அருகே வடக்கு அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்தவர்கள் மகாகிருஷ்ணன்-கனகாதேவி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினருக்கிடையே கடந்த இரண்டு வருடங்களாக தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகா கிருஷ்ணன் கனகாதேவியை வெட்டிக்கொலை செய்து உடலை அப்பகுதியில் உள்ள ஒரு பிச்சிப்பூ தோட்டத்தில் வீசியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கனகாதேவி உடலை மெட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளியை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதாவது, "தம்பதியினருக்கிடையே இடையே ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகம் எழுந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கனகாதேவி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மகாகிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தி, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மகாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றதும், மனைவி கனகாதேவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கொலை செய்தது தெரிய வந்தது. அதன் பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
man arrested for kill wife in tenkasi sangaranpandal