விழுப்புரத்தில் பரபரப்பு - கள்ளகாதலியுடன் தகராறு - ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரம்.!
man arrested for kill girl friend in vilupuram
விழுப்புரத்தில் பரபரப்பு - கள்ளகாதலியுடன் தகராறு - ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் மனைவி விசாலாட்சி. இவருக்கும் மேட்டுத்தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன் என்பவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் விசாலாட்சி முருகனுடனான உறவை திடீரென முறித்துக்கொண்டுள்ளார். இதை, ஏற்றுக்கொள்ள முடியாத முருகன் கடந்த 19-ந்தேதி இரவு, விசாலாட்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரும்படி கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி, வேறு வழியில்லாமல் கையில் மண்எண்ணெய் கேனுடன் சென்றார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன் விசாலாட்சி கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
வலித் தாங்கமுடியாத விசாலாட்சி அலறி துடித்தபடி ஊருக்குள் ஓடி வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், விசாலாட்சி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
man arrested for kill girl friend in vilupuram