வரலாறு அதை சொல்லும்... மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா! எப்போது தெரியுமா?
makkal needhi maiam 7th Annual
வருகின்ற 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின்7ம் ஆண்டு துவக்க விழாவை கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு துவக்க நாளாகும்.
இந்த நாளை சிறப்போடு கொண்டாடும் விதமாக கட்சியின் தலைவர் கமலஹாசன் காலை 10 மணி அளவில் நமது தலைமை நிலையத்தில் மக்கள் நீதி மைய கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளை சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தாய்மொழி தினத்தில் பிறந்த மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதை சொல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
makkal needhi maiam 7th Annual