வீட்டிலேயே நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பு...! கள்ளக்குறிச்சியில் நாட்டுத் துப்பாக்கி விற்ற தந்தை - மகன் கைது...!
Making country made gun at home Father and son arrested selling country made gun Kallakurichi
கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் உள்ள நாகக்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தகவலின் அடிப்படையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்திய விசாரணை மற்றும் சோதனையில் நாட்டு துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்ததாக சாமிதுரை, அவரது மகன் உள்பட 3 பேர் சிக்கினர். அவர்களை காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 3 ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. மேலும், இந்த துப்பாக்கிகள் எங்கு தயாரிக்கப்பட்டன, யாரிடம் விற்பனை செய்யப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Making country made gun at home Father and son arrested selling country made gun Kallakurichi